Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிரபல தொலைக்காட்சி நடிகரின் 2 வயது குழந்தை மரணம் - காரணம் தெரிந்தால் அதிர்ந்துதான் போவீர்கள்..!


தொலைக்காட்சி நடிகர் பிரதிஷ் வோராவின் 2 வயது மகள் பிளாஸ்டிக் பொம்மையை விழுங்கியதால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகர் பிரதிஷ் வோரா. அவருக்கு 2 வயதில் மகள் இருந்தார். அவர் கடந்த 7ம் தேதி இரவு வீட்டில் பொம்மையை வைத்து விளையாடியுள்ளார். அப்பொழுது எதிர்ப்பாராத விதமாக ஒரு பிளாஸ்டிக் பொம்மையை குழந்தை விழுங்கிவிட்டது. 

பொம்மை குழந்தையின் தொண்டையில் சிக்கி மூச்சு திணறி இறந்துவிட்டது. இதை நடிகர் பிரதிஷ் வோரா உறுதி செய்துள்ளார். மேலும் தனது குழந்தையின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். 

குழந்தையின் உடல் மும்பையில் இருந்து விமானம் மூலம் ராஜ்கோட் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. குழந்தையை இழந்து வாடும் பிரதிஷுக்கு ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

தற்போது,கடைகளில் விற்கப்படும் கிண்டர் ஜாய் போன்ற குழந்தைகள் விரும்பும் சாக்லேட்டுகள், சில சிப்ஸ் பாக்கெட்டுகள், நொறுக்கு தீனிகள் போன்றவற்றில் குழந்தைகளை கவர்வதற்காக சிறிய சிறிய பொம்மைகளை வைத்துள்ளார்கள். இது போன்ற சிறிய பொம்மைகளை குழைந்தைகள் விழுங்கி விட அதிக வாய்ப்புள்ளது. 

உங்கள் வீட்டிலோ, அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் வீட்டிலோ குழந்தைகள் இருந்தால் நிச்சயம் இந்த விஷயத்தை கூறி அவர்களை எச்சரிக்கை படுதுங்கள். குட்டி குட்டி பொம்மைகள் இலவசமாக கிடைக்கிறேதே என்று அது போன்ற பொருட்களை வாங்க வேண்டாம் என அறிவுறுத்துங்கள். குழந்தைகள் ஒரு வரம். அதனை நாம் பாதுக்காக வேண்டாமா..?

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement