பிக்பாஸ் இந்நிகழ்ச்சி ஆரம்பம் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் 2 சீசன்
வெற்றிகரமாக ஓடிவிட்டது. 3வது சீசனுக்காக மக்கள் அனைவரும் வெயிட்டிங்,
சமீபத்தில் நிகழ்ச்சியின் புரொமோ ஷுட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜுன்
மாத ஆரம்பத்தில் இருந்து நிகழ்ச்சியின் புரொமோவை எதிர்ப்பார்க்கலாம்.
மற்றபடி போட்டியாளர்கள் யார் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை,
நிகழ்ச்சியின் 2 நாட்களுக்கு முன்பு வெளியானால் ஆகலாம்.
இந்நிகழ்ச்சியில்
கலந்துகொள்ள வாய்ப்பு வந்தால் போக மாட்டேன் என்று நடிகைகள் கூறி வரும்
நிலையில், அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக செல்வேன், ஜெயிப்பேன்
என்று கூறி வருகிறார் பிரபல நடிகை உமா ரியாஸ்.
இவரது மகன் ஷாரிக் பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

0 Comments