மும்பையைச் சேர்ந்தவர் அனுயா. கிளாஸ் டீச்சர் என்ற இந்திப் படத்தின்
மூலம் சினிமாவுக்கு வந்தவர், தமிழில் சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம்
அறிமுகமானார்.
அதன்பிறகு மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான்
உள்பட சில படங்களில் நடித்தார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும்
அனுயா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆரம்பகட்ட நிலையிலேயே
வெளியேறினார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் பாடகி சுசித்ரா தனது
டுவிட்டரில் நடிகர், நடிகைகளின் ஆபாச படங்களை வெளியிட்டார். அதில் அனுயா
படங்களும் வெளியாகி இருந்தது. அதன் பிறகு அதனை சுசித்ராவின் கணவர் கார்திக்
குமார், சுசித்ரா பெயரில் யாரோ செய்த வேலை என்று மறுத்தார்.
என்றாலும்
அந்த படங்கள் இப்போதும் சுசிலீக்ஸ் என்ற பெயரில் இணையதளத்தில் பரவி
வருகிறது. அறிமுகமான புதிதில் கடகடவென நான்கைந்து படங்களில் நடித்து விட்டார்.
ஆனால், அதன் பிறகு உடல் எடை கூடியதாலும், வயதான தொர்ரதினாலும் வாய்புகள் வரவில்லை. இந்நிலையில் தான், இவரது அந்தரங்க புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாக பரவி இவரது சினிமா வாழ்கையை சிதைத்தது.
தற்போது, ஹிந்தி சீரியல் ஒன்றில் நடித்து வரும் இவர் சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.


0 Comments