பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஹரிஷ் கல்யாண் அதன்பிறகு காதல் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

ப்யார் பிரேமா காதல் படம் ஹிட் ஆன நிலையில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் சுமாராக ஓடியது.

இந்நிலையில் தற்போது ஒரு பாலிவுட் பட ரீமேக்கில் அவர் நடிக்கவுள்ளார். "விக்கி டோனர்" என்று படத்தினை தமிழில் ரீமேக் செய்யவுள்ளனர். அதில் தான் ஹரிஷ் கல்யாண் விந்து நன்கொடையாளர் ரோலில் நடிக்கவுள்ளார்.

அயோக்யா படத்தினை வெளியிட்ட ஸ்கீரீன் ஸீன் நிறுவனம் தான் இந்த படத்தினை தயாரிக்கவுள்ளது.