தெலுங்கு புலி, கன்னட நரசிம்மா படங்களின் மூலம் புகழ்பெற்றவர் நிகிஷா படேல். என்னமோ ஏதோ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு தலைவன், கரையோரம், நாரதன், 7 நாட்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்களில் நடித்தார்.

தற்போது அவர் எழில் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சரண் இயக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ஆரவ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:


நான் இந்தபடத்தில் ஆரவ் காதலியாக நடிக்கிறேன். மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் ஏற்கனவே முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். இயக்குநர் சரண் என்னை மிகவும் பேஷனான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார் என்றார்.