Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

என் படத்தையும் வந்து பாருங்க..! - தியேட்டர் வாசலில் கூவி கூவி டிக்கெட் விற்ற தயாரிப்பாளர்..!


விஷாலின் அயோக்யா படம் ரிலீஸாகவில்லை. ஜீவாவின் கீ மதியம் ரிலீஸானது. எங்கு சென்றாய் என் உயிரே, உண்மையின் வெளிச்சம், வேதமானவள், காதல் முன்னேற்றக் கழகம் ஆகிய படங்களும் இன்று வெளியாகின.

இந்நிலையில் எங்கு சென்றாய் என் உயிரே படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.வி. பாண்டி தியேட்டர் வாசலில் நின்று கொண்டு தன் படத்தை பார்க்க வாங்க என்று ரசிகர்களை அழைத்துள்ளார். தானே டிக்கெட் வாங்கி அதை குறைந்த விலைக்கு மக்களிடம் கொடுத்து படத்தை பார்க்க வைத்துள்ளார் பாண்டி.

மேலும் படம் பிடிக்கவில்லை என்றால் டிக்கெட் விலையுடன் 100 ரூபாய் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். சிறு படங்களுக்கும் தயவு செய்து ஆதரவளியுங்கள் என்று பாண்டி ரசிகர்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வை அங்கிருந்த ரசிகர்கள் வருத்தத்துடன் பார்த்து சென்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement