Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இந்த லிஸ்டில் அஜித் முதல் - விஜய் நான்காவது - நடிகை தமன்னா பதில்..!


தமிழ் படங்களில் தொடச்சியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை தமன்னா. அவர் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, கார்த்தி என எல்லா நடிகர்களுடனும் நடித்து விட்டார். இருந்தாலும், அவருக்கு தமிழில் தொடர்ச்சியான வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடிக்கிறார்.

நடிகர் பிரபு தேவாவுடன் இணைந்து அவர் தேவி 2 படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தற்போது ரிலீசாகி இருக்கும் நிலையில், அவர் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்த போது, பேட்டி அளித்தார். அப்போது, உங்களுக்குப் பிடித்த தமிழ் நடிகர்களை உங்கள் எண்ணப்படி வரிசைப்படுத்துங்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதும், கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் பதில் அளித்திருக்கிறார் நடிகை தமன்னா.

அவர் கூறியதாவது: தமிழ் படங்களின் கதாநாயகர்களைப் பொறுத்த வரையில், எனக்கு பிடித்த நடிகர்கள் லிஸ்டில் முதல் நடிகர் என்றால் அது அஜித் தான். அடுத்த இடம் நடிகர் விஷாலுக்கு. அவருக்கு அடுத்த நிலையில் நடிகர் கார்த்தி வருவார். நான்காவதாகத்தான் நடிகர் விஜய்யை எனக்குப் பிடிக்கும்.

இப்படி நடிகர்களை யாரும் வெளிப்படையாக வரிசைப்படுத்த மாட்டார்கள். இருந்தாலும், தைரியமாக தமன்னா வரிசைபடுத்தி இருக்கிறது. இது, பலராலும் பாராட்டப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement